கஸ்டர்ட் அப்பிள் புடிங்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அப்பிள் - 2

கன்டென்ஸ்ட் மில்க் - 1/2 ரின்

சீனி - 1 மேசைக்கரண்டி,

பால்மா - 3 மேசைக்கரண்டி

கஸ்டர்ட் பவுடர் - 4 மேசைக்கரண்டி

கஜு (முந்திரி) - சிறிது

ரெய்சின் - சிறிது

செய்முறை:

அப்பிளை சிறிய துண்டுகளாக வெட்டி கஜு, ரெய்சினுடன் கலந்து வைக்கவும்.

கன்டென்ஸ்ட் மில்க், கஸ்டர்ட் பவுடர் சேர்த்து நன்கு அடிக்கவும்.

பின்னர் இந்த கலவையை வெட்டிய அப்பிள், பால்மா, சீனியுடன் சேர்த்து கலக்கவும்.

பின்னர் சிறிய கிண்ணங்களில் ஊற்றி ஆவியில் வைத்து 10- 15 நிமிடங்களுக்கு அவித்து எடுத்து ஆறவிடவும்.

ஆறியதும் ஃபிரீசரில் வைத்து குளிரூட்டவும்.

சுவையான புடிங் தயார். தேவையானபோது எடுத்து மீண்டும் கரண்டியால் கடைந்துவிட்டு கிண்ணங்களில் போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: