கவாபு
தேவையான பொருட்கள்:
ஸ்மோக்டு டூனா மீன் (Valhoamas) - ஒரு துண்டு வெங்காயம் - ஒன்று தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி மைதா - கால் கப் உப்பு மஞ்சள் தூள் கிதியோ மிருஸ் (Githeyo Mirus) - பாதி எலுமிச்சை - பாதி இஞ்சி - ஒரு துண்டு கடலைப்பருப்பு - அரை கப் மிளகாய் வற்றல் - ஒன்று கறிவேப்பிலை எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயத்துடன் கறிவேப்பிலை
இஞ்சி
கிதியோ மிருஸ் சேர்த்து பிசையவும்.
இதனுடன் பொடித்த மீன்
தேங்காய் துருவல்
எலுமிச்சை சாறு
மஞ்சள் தூள்
உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
கடலைப்பருப்பை சிறிது நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் மிளகாய் வற்றல் சேர்த்து வடை மாவு பதத்தில் கொர கொரப்பாக அரைக்கவும்.
மீன் கலவையுடன் பருப்பு கலவை
மைதா மற்றும் உப்பு சேர்த்து பிசையவும்.
பிசைந்த கலவையை உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான மாலத்தீவு ஸ்பெஷல் கவாபு தயார்.