கலர்புல் கடல் பாசி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அகர் அகர்(கடல்பாசி) - ஒரு பிடியளவு சீனி - 10 தேக்கரண்டி ரோஸ் எசன்ஸ் - சில துளி உப்பு - சிறிது கலர்ஸ் - 2 முட்டை வெள்ளை கரு - 1

செய்முறை:

தேவையானவற்றை தயாராய் வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

கொதி வந்ததும் கடல்பாசியை போடவும்.

முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை பிரித்தெடுக்கவும்.

வெள்ளை கருவை 2 கோப்பையில் பிரித்து வைக்கவும்.

அதில் 2 விருப்பமான கலர்களை போட்டு கலக்கி வைக்கவும்

எசன்ஸ் சேர்க்கவும்.

கடல்பாசி நன்றாக கரைந்ததும்

உப்பு

சீனி சேர்த்து கலக்கி ஒரு தட்டில் வடிக்கட்டவும்.

வடிக்கட்டிய கடல்பாசியை சிறிது நேரம் ஆற விடவும்.

2 நிமிடங்கள் ஆறிய பின் 2 கலர்களை மேலே தெளித்து விடவும்.

நன்றாக ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து பின் வில்லைகள் போடவும்.

குறிப்புகள்: