கறி பன்
தேவையான பொருட்கள்:
பிரெட் மா(bread flour) - 750 கிராம் ஈஸ்ட் - ஒரு தேக்கரண்டி உருளைக் கிழங்கு - 500 கிராம் லீக்ஸ் - 250 கிராம் மிளகாய்த்தூள் - ஒரு மேசைக்கரண்டி உப்பு - 4 தேக்கரண்டி சீனி - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - 6 மேசைக்கரண்டி எலுமிச்சம் புளி - 2 தேக்கரண்டி
செய்முறை:
கறி பன் செய்ய தேவையானவற்றை தயார் நிலையில் எடுத்து வைக்கவும்.
ப்ரெட் மாவுடன் ஈஸ்டை சேர்த்து சல்லடையில் போட்டு 2 முறை சலித்து எடுத்துக் கொள்ளவும்.
சலித்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு ஆற வைத்த தண்ணீர்
2 தேக்கரண்டி உப்பு
சீனி
2 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து ரொட்டிப் பதமாக பிசைந்து அரை மணி வைக்கவும்.
உருளைக்கிழங்குடன் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து வேக வைத்து தோல் உரித்து பிசைந்துக் கொள்ளவும். லீக்ஸை மிகவும் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி லீக்ஸை போட்டு வதக்கவும். அதில் மிளகாய் தூள்
மீதமுள்ள உப்பு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி இறக்கி வைத்து எலுமிச்சை புளி சேர்த்து பிரட்டி விடவும்.
பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து கையில் தண்ணீர் தொட்டுக் கொண்டு உருண்டைகளாக உருட்டி அந்த உருண்டைகளை ரொட்டியாக தட்டி மேலே கறியை வைக்கவும். (மாவை அதிகம் மெல்லியதாகவும் தட்ட வேண்டாம்
அதிகம் தடிப்பாகவும் தட்ட வேண்டாம்). பின்னர் நான்காக மடிக்கவும். (மடித்த பகுதி தடிப்பாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்)
இதை போல் மற்ற உருண்டைகளிலும் செய்து வைத்துக் கொள்ளவும். மடித்த பகுதி கீழே இருக்கும்படியாக வைத்து
இடைவெளிவிட்டு
ஒரு அவன் தட்டிலே அலுமினியப் பேப்பர் போட்டு
மீதமுள்ள எண்ணெயைத் தட்டில் நன்கு தடவி விட்டு
பன்களை அடுக்கவும்.
அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். பின்னர் அவனை 400 F ல் வைத்து பன்களை 40 நிமிடங்கள் வைக்கவும். நல்ல பிரவுன் நிறமானதும்(பண் கலர்)
அவனை ஓஃப் பண்ணவும்.
ஒரு தடவை எல்லா பன்களையும் பிரட்டி ஓஃப் பண்ணியுள்ள அவனில் வைத்து விடவும். (10 நிமிடங்களில் வெளியே எடுக்கவும்).
சுவையான கறி பன் ரெடி. இங்கு வைத்துள்ள இக்கறிக்கு பதில்
சீனிச்சம்பல்
மீன்சம்பல்
இறைச்சிக்கறி போன்றவை எதுவேனும் பிரட்டலான கறிகள் செய்து வைத்து
சுற்றுலாக்களுக்கு எடுத்துச் செல்லலாம்.