கறித்தூள்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

செத்தல் மிளகாய்(காய்ந்த மிளகாய்) - 1 கிலோ

மல்லி(தனியா) - 2 கிலோ

பெரிய சீரகம்(சோம்பு) - 100 கிராம்

சின்னசீரகம்(சீரகம்) - 50 கிராம்

மிளகு - 50 கிராம்

கறிவேப்பிலை(காயவைத்தது) - 1 கட்டு

மஞ்சள் - 2 - 3 துண்டு

செய்முறை:

அனைத்துப் பொருட்களையும் தனித்தனியே வெரும் சட்டியில் வறுத்து ஆறவிட்டு கலந்து மெஷினில் கொடுத்து நைசாக அரைத்து எடுக்கவும்.

குறிப்புகள்:

அவரவரின் உறைப்புத் தேவைக்கேற்ப மிளகாயின் அளவை கூட்டி குறைக்கலாம்.