கரேலா கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாகற்காய் - கால் கிலோ பச்சை மிளகாய் - 3 வெங்காயம் - 2 இஞ்சி - சிறிய துண்டு பூண்டு - 5 பல் தக்காளி - 2 புளி - சிறிய நெல்லிக்காய் அளவு மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - சிறிதளவு கடுகு

பெருங்காய தூள்

காய்ந்த மிளகாய்

கலோஞ்சி

கறிவேப்பிலை - தாளிக்க எண்ணெய் - சிறிதளவு வறுத்து பொடிக்க : சோம்பு - அரை தேக்கரண்டி சீரகம் - அரை தேக்கரண்டி கலோஞ்சி - ஒரு தேக்கரண்டி வெந்தயம் - கால் தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 3 கடுகு - அரை தேக்கரண்டி பெருங்காயம் - சிறிதளவு தனியா விதை - ஒரு தேக்கரண்டி கசூரி மேத்தி - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

எண்ணெயில்லாமல் வறுத்து பொடிக்க கொடுத்துள்ளதை (கசூரி மேத்தியை தவிர்த்து) வறுத்து எடுக்கவும். ஆரிய பின் கசூரி மேத்தி சேர்த்து பொடித்து வைக்கவும்.

வெங்காயம்

பச்சை மிளகாய்

இஞ்சி பூண்டு எல்லாத்தையும் ஒன்றாக போட்டு விழுதாக அரைத்து வைக்கவும்.

எண்ணெய் சூடானதும் அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரையில் மிதமான தீயில் வைத்து வதக்கவும். சிவக்க வேண்டும் என்றில்லை.

பச்சை வாசம் அடங்கியதும் வில்லையாக நறுக்கி வைத்துள்ள பாகற்காயை சேர்த்து கிளறவும்.

இரண்டு நிமிடம் கழித்து தக்காளி விழுது

மஞ்சள் தூள்

மிளகாய் தூள்

உப்பு

புளிகரைசல் சேர்க்கவும். தேவையெனில் சிறிதளவு தண்ணீர் தெளித்து கிளறவும். இப்பொழுது மூடி வைத்து வேக விடவும்.

ஓரளவுக்கு வெந்ததும் பொடித்து வைத்துள்ள பொடியை தூவி கிளறவும். திரும்பவும் தண்ணீர் தெளித்து மேலும் வேக விடவும்.

வேறு ஒரு பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ளதை கொட்டி தாளிக்கவும்.

பாகற்காய் நன்கு வெந்ததும் தாளித்து வைத்துள்ளதை கொட்டி ஒரு கிளறி கிளறி பரிமாறவும். சுவையான அதிகம் கசப்பில்லாத கரேலா கறி ரெடி. இது எல்லா சாத வகைகளுக்கும் நல்ல காம்பினேஷன். பாகற்காய் பிடித்தால் சப்பாத்தியுடன் கூட வைத்து சாப்பிடலாம். இப்படி செய்தால் பாகற்காய் பிடிக்காதவர்கள் கூட சாப்பிடுவார்கள்.

குறிப்புகள்: