கருவாடு சுண்டல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கருவாடு - 250 கிராம்

வெங்காயம் - 2

புளி - எலுமிச்சையளவு

பூண்டு - 3 பல்

பச்சை மிளகாய் - 10

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கருவாட்டை சிறு துண்டுகளாக நறுக்கி 2 அல்லது 3 முறை தண்ணீரில் கழுவவும். புளியை கரைத்து வைக்கவும்.

வெங்காயத்தை மெல்லிய நீளத்துண்டுகளாக வெட்டவும். மிளகாயை கீறி சிறிதளவு உப்பை அதற்குள் போட்டு வைக்கவும். இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து சிவக்க வறுக்கவும்.

பின்பு கரைத்து வைத்துள்ள புளி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

கொதித்ததும் கருவாட்டு துண்டுகளைப் போட்டு கிளறி மூடிவிடவும். அடுப்பை சிம்மில் வைக்கவும். கருவாடு வெந்து நீர் சுண்டியதும் இறக்கி வைக்கவும்.

குறிப்புகள்:

இது சூடான சாதம், புட்டுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.