கரும்பு ஜூஸ்
0
தேவையான பொருட்கள்:
தோல் சீவிய கரும்பு (மிகவும் சிறு துண்டுகள்) - 200 கிராம்
குளுக்கோஸ் - ஒரு மேசைக்கரண்டி
வெள்ளை மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கரும்புத் துண்டுகளோடு குளுக்கோஸ் உப்பு சேர்த்து மிக்ஸியில் கிரஷர் பிளேடு போட்டு நன்றாக அடித்து கொள்ளவும்.
பின்பு ஜூஸை வடிகட்டி வெள்ளை மிளகுத்தூள் கலந்து பரிமாறவும்.
குறிப்புகள்:
கரும்பு ஜூஸ் ஈரலுக்கு மிக நல்லது, உடனடி புத்துணர்ச்சிக்கு எளியது. கவனிக்க வேண்டிய விஷயங்கள் - தோல்சீவிய மிகவும் சிறுதுண்டுகள் கரும்பு, கரும்புத்துண்டுகளோடு குளுக்கோஸ் உப்பு சேர்த்து மிக்ஸியில் கிரஷர் பிளேடு போட்டு நன்றாக அடித்து கொள்ளவும். எச்சரிக்கை- சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி குடிக்கவும்.