கரட் புட்டு
0
தேவையான பொருட்கள்:
வறுத்த சிவப்பரிசிமா - 2 கப்
கரட் துருவல் - 3/4 கப்
வெட்டிய கோவா(கபேஜ்) - 1/4 கப்
தேங்காய்ப்பூ - 4 மேசைக்கரண்டி
உப்பு
செய்முறை:
கரட் துருவல், கோவாவை (கபேஜ்) கலந்து ஒரு சிட்டிகை உப்பு போட்டு கலக்கவும்.
அரிசிமாவில் உப்பு சேர்த்து கலந்து சுடு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.
மாவுக்கலவை கையால் பிடித்தால் நிற்கக் கூடிய பதத்திற்கு வந்ததும் அதனை ஒரு பரந்த தட்டில் (உ + ம்:-பேக்கிங் தட்டு) கொட்டி ஒரு தம்ளரினால் சிறிய குறுணல்களாக கொத்தவும்.
இதனுடன் தேங்காய்ப்பூ, கரட் கலவையை கலந்து ஆவியில் அவித்து எடுத்து ஆறவிடவும்.
சுவையான கரட் புட்டு தயார். இதனை கறி, குழம்பு, சம்பல், சாம்பார் என அனைத்து பக்க உணவுகளுடனும் சாப்பிடலாம்.
குறிப்புகள்:
அரிசி மாவிற்கு பதில் குரக்கன் மா(ராகி) சேர்த்தும் செய்யலாம்.