கரட் சிப்ஸ்
தேவையான பொருட்கள்:
கரட் - 2
உப்பு
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
மைதாமா - 1/4கப்
செய்முறை:
கரட்டை நீளவாக்கில் வட்டமான மெல்லிய துண்டுகளாக வெட்டவும்.
பின்னர் வெட்டிய துண்டுகளை மைதா மாவினுள் புரட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு கலகலத்தவுடன் வடித்து எடுத்து எண்ணெய் ஒற்றும் தாளில் (பத்திரிகைத்தாள், பேப்பர் டவல், டிஸ்யூ பேப்பர்) போடவும்.
பின்னர் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கவும்.
சுவையான சிப்ஸ் தயார். சோறுடன் அல்லது ஸ்னாக்ஸாக சாப்பிடலாம்.
குறிப்புகள்:
கரட் மெல்லியதாக இல்லாமல் மொத்தமானதாக இருந்தால் நல்லது. பேபி கரட், மெல்லிய கரட்டில் செய்தால் சரியாக வராது. மைதாமாவை கரைக்க வேண்டம். ஒரு டஸ்ட் மாதிரி கரட் துண்டுகள் மேல் பட்டால் போதும். கரட் துண்டுகள் ஒட்டாது தனித்தனியே இருப்பதற்காகதான் மைதாமாவில் புரட்டுவது. மைதாவில் சோளமாவும் கலந்தால் கொஞ்சம் மொருமொருதன்மையும் கிடைக்கும்.