கரட் சம்பல்
தேவையான பொருட்கள்:
கரட்-250கிராம்
மிளகாய்-3
கடுகு-கால்தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம்-சிறிதளவு
புளி-சிறிதளவு
உப்பு-தேவையானளவு
எண்ணெய்-சிறிதளவு
செய்முறை:
கரட்டை நன்றாக உப்பு கலந்த நீரில் கழுவவும்.
கழுவியபின்னர் அதன் தோலை நன்றாக சீவவும்.
சீவிய பின்னர் தோல் சீவிய கரட்டை பொடியாக (குறுணியாக) வெட்டி(நறுக்கி) கொள்ளவும்.
அதன் பின்னர் நறுக்கிய கரட்டினை ஒரு பாத்திரத்தில் போடவும் .
அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை அல்லது வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும் .
எண்ணெய் சூடான பின்னர் அதில் மிளகாய், உளுத்தம்பருப்பு பெருங்காயம். கடுகு ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
வதக்கிய பின்னர் வதக்கியவற்றுடன் பொடியாக (குறுணியாக) வெட்டிய (நறுக்கிய) கரட்டை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
கரட்டை போட்டு வதக்கிய பின்னர் வதக்கியவற்றை வெளியே எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறவிடவும்.
இவையாவும் ஆறிய பின்னர் கிரைண்டரில்(மிக்ஸியில்) வதக்கிய எல்லா வற்றையும் போட்டு அதனுடன் உப்பு, புளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைக்கவும்.
அரைத்த பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
அதன் பின்னர் சுத்தமான சுவையான சத்தான சத்தான கரட்சம்பல் தயாராகி விடும்.
தயாரான பின்னர் ஒரு தட்டில் சோற்றினை(சாதத்தினை) வைத்து அதனுடன் சுத்தமான சுவையான சத்தான கரட் சம்பலை வைத்து பறிமாறவும். ..
குறிப்புகள்:
கரட் சம்பலை சாப்பிட்டால் கண்ணுக்கு மிகவும் நல்லது