கப் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாவு(all purpose flour) – 500 கிராம் மாஜரின் – 500 கிராம் முட்டை – 10 சீனி – 500 கிராம் வெனிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்- 3 தேக்கரண்டி

செய்முறை:

மாவுடன் பேக்கிங் பவுடரை போட்டு கலந்து சலித்து வைத்துக் கொள்ளவும். அவனை 300 F -ல் முற்சூடு செய்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சீனி மற்றும் மாஜரினை சேர்த்து போட்டு நன்றாக நுரைத்து ப்ளஃபியாக ஆகும் வரை அடிக்கவும்.

அதன் பிறகு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு எல்லாம் ஒன்றாக சேரும்படி அடித்துக் கொள்ளவும். முட்டைகள் எல்லாவற்றையும் சேர்த்து ஊற்றாமல் ஒன்றிரண்டாக உடைத்து ஊற்றவும். அதிக நேரம் அடிக்க வேண்டாம்.

எல்லா முட்டைகளும் ஒன்றாக கலந்த பிறகு வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக சேரும்படி அடிக்கவும்.

பின்னர் இந்த கலவையுடன் சலித்து வைத்திருக்கும் மாவை சேர்த்து அடிக்கவும். இந்த கலவையை கப் கேக் அச்சில் முக்கால் பாகம் அளவு நிரப்பி பேக் செய்து நார்மல் கப் கேக் போல் சாப்பிடலாம்.

வித்தியாசமாக செய்ய வேண்டுமென்றால் கலந்த மாவுடன் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து பேக் செய்யலாம். சாக்லேட் சிப்ஸ் சேர்த்த பின்னர் கலவையை அடிக்க தேவையில்லை.

மற்றொரு முறையிலும் செய்யலாம்

சாக்லேட் சிப்ஸ் மற்றும் கோக்கோ பவுடர் சேர்த்து கலந்து கப்புகளில் ஊற்றி பேக் செய்து எடுக்கலாம். கோக்கோ பவுடர் சேர்க்கும் போது ஒரு கப் கலவைக்கு 2 தேக்கரண்டி சேர்க்கவும். விரும்பினால் சாதாரணமாக செய்து வைத்திருக்கும் கலவையில் சிறிதும் கோக்கோ சேர்த்த கலவையில் சிறிதும் வைத்து பேக் செய்யலாம் பார்க்க வித்தியாசமாக இருக்கும்.

கலவையுடன் மிக்ஸ்டு க்ளேஸ் ப்ரூட்டும் சேர்த்து கொள்ளலாம்.

சாதாரணமாக செய்து வைத்திருக்கும் கப் கேக் கலவையுடன் விரும்பிய கலரை கலந்தும் பேக் செய்யலாம். முன்பு கூறியது போல்

இரு வேறு நிற கலவையை சேர்த்தும் கப் கேக் செய்யலாம்.

கலவையுடன் சிறிது பேரீச்சை பழம்

முந்திரி பருப்பு அல்லது பாதாம் பருப்பு சேர்த்து அடித்து கப் கேக் செய்யும் அச்சியில் ஊற்றி பேக் செய்தும் எடுக்கலாம்.

சுவையான கலர் கலரான கப் கேக்கள் தயார். விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி கப் கேக்கள் செய்யலாம்.

குறிப்புகள்: