கப்சா (அரேபிய உணவு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - அரை படி சிக்கன் - அரை கிலோ சிக்கன் க்யூப் - ஒன்று வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று கேரட் - ஒன்று காய்ந்த மிளகாய் - ஒன்று பட்டை

ஏலக்காய் - தலா ஒன்று சீரகம் - ஒரு தேக்கரண்டி தக்காளி விழுது - 2 தேக்கரண்டி எண்ணெய் - 3 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு சிக்கன் பொரிக்க தேவையான மசாலா: மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி தந்தூரி மசாலா - ஒரு தேக்கரண்டி (விரும்பினால்) உப்பு - தேவையான அளவு சாஸ் செய்ய: வெங்காயம் - பாதி தக்காளி - 2 பச்சை மிளகாய் - 4 பூண்டு - ஒரு பல் மல்லி கீரை - சிறிது எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி உப்பு - சிறிது

செய்முறை:

வெங்காயம்

தக்காளியை நறுக்கி வைக்கவும். கேரட்டை துருவி வைக்கவும். சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை

ஏலக்காய்

மிளகாய் மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் சிறிது வதங்கியதும் தக்காளி மற்றும் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கேரட்

சீரகம்

சிக்கன் க்யூப் சேர்க்கவும். (அரை படி அரிசிக்கு ஒரு படி தண்ணீர்).

அவற்றோடு சிக்கனை சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.

அரை வேக்காடு வெந்ததும் அதிலிருந்து சிக்கனை தனியாக எடுத்து விடவும். அந்த நீரில் அரிசியை களைந்து போட்டு மூடி வேக விடவும்.

சிக்கனை பொரிக்க தேவையான மசாலாக்களை சேர்த்து சிக்கனை பொரித்தெடுக்கவும்.

சாஸுக்கு தேவையான பொருட்களை மிக்ஸியில் 1 - 2 சுற்றுகள் அரைத்து கொள்ளவும்.

அரைத்த சாஸ் இதேபோல் ஒன்றிரண்டாக இருக்க வேண்டும். இதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். சாஸ் தயார்.

சூடான கப்சா சிக்கன் ஃப்ரை மற்றும் காரசாரமான சாஸுடன் பரிமாற அருமையாக இருக்கும். இது கிட்டத்தட்ட நமது ஊர் பிரியாணி போல தான். ஆனால்

குறைவான எண்ணெயில் மற்றும் மசாலாவே இல்லாத ஒரு பிரியாணி. கப்சாவில் காரம் குறைவாக இருக்கும். அதனை ஈடு செய்வதற்கு தான் இந்த சாஸ்.

குறிப்புகள்: