கனேடியன் வெஜிடபிள் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மக்காச்சோளம் - இரண்டு டின்(ஒன்று 8-10 ounce)

தக்காளி - இரண்டு டின்(ஒன்று 28 ounce)

சிவப்பு குடைமிளகாய் - ஒன்று

பச்சைநிற குடைமிளகாய் - ஒன்று

வெங்காயம் - ஒன்று

பூண்டு - இரண்டு பற்கள்

பேசில் இலைகள் - அரைக்கோப்பை

சாலட் குரூட்டான்ஸ்(croutons) - ஒரு கோப்பை

துருவிய மொஸரல்லா சீஸ் - அரைக்கோப்பை

மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

வெங்காயம் பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குடைமிளகாய்களை சுத்தம் செய்து வெங்காயத்தின் அளவாகவே நறுக்கி வைக்கவும்.

அடுப்பில் வைக்கக்கூடிய ஒரு பாத்திரத்தில் தக்காளி மற்றும் மக்காச்சோள டின்களை திறந்து ஊற்றி நன்கு கலக்கவும்.

பிறகு சீஸும், குரூட்டான்சும் தவிர எல்லாப் பொருட்களையும் சேர்த்து கலக்கி அடுப்பில் வைக்கவும்.

கலவை கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது அனலை குறைத்து வைத்து மூடிப் போட்டு வேகவிடவும்.

அரைமணி நேரத்தில் எல்லா காய்களும் வெந்து தயாராகியிருக்கும்.

இதை அவனில் வைக்ககூடிய சிறிய அளவான நான்கு கோப்பைகளில் ஊற்றி முதலில் குரூட்டான்களை போட்டு அதன் மேலாக சீஸை தூவி விடவும்.

இவ்வாறு நான்கு கோப்பையையும் தயார் செய்து 400 டிகிரி Fல் சூடான அவனில் வைத்து சீஸ் உருகும் வரை வைத்திருந்து வெளியில் எடுத்து டின்னர் ரோல்ஸ்சுடன் சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: