கனேடியன் லாம்ப் ஸ்டூவ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

லாம்ப் கறி - அரைக்கிலோ

வெங்காயம் - ஒன்று

பூண்டு - இரண்டு பற்கள்

தக்காளி - ஒரு கேன் 398ml

தக்காளி பேஸ்ட் - இரண்டு மேசைக்கரண்டி

நறுக்கிய காளான் - ஒரு கோப்பை

நறுக்கிய சிவப்பு குடைமிளகாய் - ஒன்று

சிக்கன் ஸ்டாக் - இரண்டரை கோப்பை

பாப்ரிகா பவுடர் - ஒரு மேசைக்கரண்டி

கார்ன் ஸ்டார்ச் - இரண்டு தேக்கரண்டி

உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி

மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி

நறுக்கிய பார்ஸ்லி தழை - இரண்டு மேசைக்கரண்டி

செய்முறை:

கறியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக்கி வைக்கவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பூண்டை நசுக்கி வைக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி காயவைத்து வெங்காயம் பூண்டைப் போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு நறுக்கிய கறியைப் போட்டு நன்கு சிவக்க வதக்கவும். தொடர்ந்து அதில் பாப்ரிகா தூள் மற்றும் மிளகுத்தூளை போட்டு வதக்கி விடவும்.

பிறகு தக்காளியை கேனிலிருந்து உடைத்து ஊற்றி தக்காளி பேஸ்ட்டையும் சேர்த்து கிளறி விடவும்.

அதை தொடர்ந்து குடைமிளகாய் மற்றும் நறுக்கிய காளானைப் போட்டு வதக்கி விட்டு சிக்கன் ஸ்டாக்கை ஊற்றி நன்கு கலக்கி விடவும்.

பிறகு கலவையை நன்கு கொதிக்க விட்டு அடுப்பின் அனலை சிம்மில் வைத்து மூடியைப் போட்டு வேகவிடவும்.

ஒரு மணி நேரம் கழித்து கறி நன்கு வெந்திருப்பதை உறுதி செய்துக் கொண்டு கார்ன் ஸ்டார்ச்சை ஒரு மேசைக்கரண்டி நீரில் கரைத்து ஊற்றி, உப்பையும் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

பிறகு மீண்டும் நன்கு கொதிக்க விட்டு ஸ்டூவ் நன்கு கெட்டியாக ஆனதும் இறக்கு விடவும்.

இந்த சுவையான லாம்ப் ஸ்டூவின் மீது பார்ஸ்லி தழையை தூவி லாங் கிரைன் ரைஸுடன் சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: