கத்தரிக்காய் பால் கறி
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 1 பெரியது (1/2lb / 250g )
பச்சை மிளகாய் - 3 - 4
வெட்டிய வெங்காயம் - 4 - 5 மேசைக்கரண்டி
தேங்காய்ப்பால் - 5 மேசைக்கரண்டி
உப்பு
எலுமிச்சம்புளி - 1 தேக்கரண்டி
தாளிக்க:
-------
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வெட்டிய வெங்காயம் - 3 மேசைக்கரண்டி
கடுகு
பெரிய சீரகம் (சோம்பு)
கறிவேப்பிலை - 1 நெட்டு
செய்முறை:
கத்தரிக்காயை சிறிய துண்டுகளாக (1" சதுர குற்றிகளாக) வெட்டவும்.
ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
பின்னர் அதனுள் வெட்டிய கத்தரிக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மூடி அவிய விடவும்.
கத்தரிக்காய் நன்கு அவிந்து தண்ணீர் ஓரளவு வற்றியதும் தேங்காய்ப்பாலை சேர்த்து கிளறி கத்தரிக்காயை நன்கு மசித்து விடவும்.
மேலும் 5 - 8 நிமிடங்களுக்கு கத்தரிக்காயை வேக விட்டு எலுமிச்சம் புளி சேர்த்து கிளறி இறக்கவும்.
வேறொரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு அதில் வெங்காயம், கடுகு, பெரிய சீரகம் (சோம்பு), கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பின்னர் தாளிதத்தை கறியினுள் கலக்கவும்.
சுவையான கத்தரிக்காய் பால் கறி தயார். இதனை சுடு சோறு, குழம்பு, அப்பளத்துடன் பரிமாறவும். சுவையாக இருக்கும்.
குறிப்புகள்:
இந்த கத்தரிக்காய் பால் கறியினுள் ஒரு வாழைக்காயும் தோல் சீவி வெட்டிப் போட்டு அவித்து சமைக்கலாம். சுவையாக இருக்கும்.