கத்தரிக்காய் பச்சடி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 2

வெங்காயம் - 1 ( பல்லாரி )

பச்சை மிளகாய் - 2

மல்லி தழை - கொஞ்சம்

தேங்காய் பால் - கொஞ்சம்

உப்பு - தே.அளவு.

எழுமிச்சை சாறு - சிறிது.

செய்முறை:

கத்தரிக்காயை அடுப்பில் வைத்து எல்லா பக்கமும் நல்லா சுட்டு எடுக்கவும்.கத்தரிக்காய் நல்லா வெந்ததும் , அதன் தோலை உரித்து எடுக்கவும்.கத்தரிக்காயை நல்லா பிசைந்து , அதனுடன் நருக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,மல்லி,உப்பு,எழுமிச்சை சாரு ஆகியவற்றை போட்டு பிசையவும்.பிறகு தேங்காய் பால் சேர்க்கவும்.

குறிப்புகள்:

அடுப்பை மெதுவாக வைத்து சுடவும்.ரொம்ப கருக விட வேண்டாம்.