கத்தரிக்காய் சாலட்
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் (பெரியது) - 2 (சுட்டது)
வெங்காயம் (பெரியது) - ஒன்று (சிறிதாக நறுக்கிய)
பச்சைமிளகாய் - (1- 3) (சிறிதாக நறுக்கியது)
மிளகு - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பால் - தேவையான அளவு
தேசிக்காய்ச்சாறு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 4 இலை (சிறிதாக நறுக்கியது)
செய்முறை:
சுட்டகத்தரிக்காயின் தோலை உரிக்கவும் (தண்ணீர் கொஞ்சம் விட்டு கசக்கி)
பாலில் குழைக்கவும் (கட்டியில்லாமல் ஒரளவு தண்ணீர் பதத்திற்கு).
நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு, கறிவேப்பிலை, உப்பு, தேசிக்காய்ச்சாறு இவை எல்லாவற்றையும் சேர்த்து குழைக்கவும். 2 நிமிடம் ஊற விடவும். சுவையான கத்தரிக்காய் சாலட் தயார்
குறிப்புகள்:
கத்தரிக்காய் சிலருக்கு அலர்ஜியுடையது, இதில் சில உயிர்சத்துக்களில் காணப்படும். முழு கத்தரிக்காயை அடுப்பில் (அடுப்பு, மின்னடுப்பு )சுடவும். கத்தரிக்காய் சாப்பிட கூடாதவர்கள் (அலர்ஜியுடையவர்கள்) வைத்தியரின் ஆலோசனையின் பின்பு உண்ணவும்.