கதம்ப பாஸ்தா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெனே பாஸ்தா - 1/2 கப்

மக்கரோனி பாஸ்தா - 1/2 கப்

போ-ரை பாஸ்தா - 1/2 கப்

ஸ்பகடி - 1/2 கப்

தக்காளி - 1பெரியது

வெட்டிய வெங்காயம் - 1/2 கப்

உள்ளி - 5 பல்லு

பாவ் பாஜி மசாலா - 2 மேசைக்கரண்டி

தக்காளி பேஸ்ட் (any brand)- 2 மேசைக்கரண்டி

மிளகாய் + மல்லி தூள் - 1 மேசைக்கரண்டி

கடுகு

பெரிய சீரகம்

உப்பு

ஒலிவ் எண்ணெய் - 5 மேசைக்கரண்டி

கராம்பு - 4

கறிவேப்பிலை

பேசில் இலை/கொத்தமல்லி இலை

செய்முறை:

தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதனுள் எல்லா வகையான பாஸ்தாகளையும் போட்டு அவிக்கவும்.

பாஸ்தா ஓரளவு அவிந்ததும் அதனுள் 2 மேசைக்கரண்டி ஒலிவ் எண்ணெய், உப்பு சேர்த்து கிளறி விடவும்.

பாஸ்தா நன்கு அவிந்ததும் வடித்து எடுத்து வைக்கவும். (வடித்த தண்ணீரில் 1/4 கப் எடுத்து தனியாக வைக்கவும் )

தக்காளி, உள்ளியை கிரைண்டரில் போட்டு அரைத்து (ப்யூரே) வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் மீதி எண்ணெயை விட்டு சூடானதும் வெங்காயம், சீரகம், கடுகு, கராம்பு,கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

பின்னர் பாஸ்தா வடித்த தண்ணீர், தக்காளி கூழ் (ப்யூரே), தக்காளி பேஸ்ட், பாவ் பாஜி மசாலா, மிளகாய் + மல்லி தூள், தேவைப்படின் சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

கலவை கொதித்து சிறிது தடித்ததும் (தண்ணீர் வற்றியதும்) அடுப்பின் தீயை குறைத்து விடவும்.(கலவை தடிப்பதற்காக 1 தேக்கரண்டி சோள மாவை (Corn flour) 2 மேசைக்கரண்டி தண்ணீரில் கரைத்தும் விடலாம்)

பின்னர் அதனுள் அவித்த பாஸ்தாவை கொட்டி கலவை பாஸ்தாக்களில் நன்கு பரவும்படி கிளறவும்.

பாஸ்தா தயார். பின்னர் இதனை பரிமாறும் தட்டில் கொட்டி பொடியாக வெட்டிய பேசில் இலை/கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

பாவ் பாஜி மசாலாவிற்கு பதிலாக சன்னா மசாலாவும் சேர்க்கலாம். சுவை சிறிது வேறுபாடாக இருக்கும். பல வகை பாஸ்தாக்களிற்கு பதில் தனி ஒரு பாஸ்தாவும் உபயோகிக்கலாம். மிளகாய் + மல்லி தூளிற்கு பதிலாக 2 மேசைக்கரண்டி சல்சாவும்(hot) சேர்க்கலாம்.