கடாய் கோஷ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் - அரை கிலோ

எண்ணெய் - 50 மில்லி

தக்காளி - 2

வெங்காயம் - 2

குடை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

சில்லிபவுடர் - 1 டீஸ்பூன்

தயிர் - 1 டேபிஸ்பூன்

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

சீரகத்தூள் - அரை ஸ்பூன்

மல்லித்தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

செய்முறை:

மட்டனை சுத்தம் செய்து நடுத்தரமாக துண்டு செய்து கொள்ளவும். நன்றாக கழுவி வடிக்கட்டவும். வெங்காயம்,தக்காளி,கொடை மிளகாய் பெரிய சதுர துண்டுகளாக கட் செய்து வைக்கவும்.

குக்கரில் மட்டன், இஞ்சி பூண்டு, சில்லி பவுடர், மிளகுத்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், தயிர், உப்பு சேர்த்து பிசறி மூன்று விசில் வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு வேகவைத்த மட்டனை போட்டு பெரிதாக அரிந்த வெங்காயம், குடை மிளகாய், தக்காளி போட்டு பிரட்டி 5-10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.

சூப்பர் சுவையுள்ள கடாய் கோஷ் ரெடி.

குறிப்புகள்:

இதை நாண், சப்பாத்தி, ஃப்ரைட் ரைஸ் உடன் பரிமாறவும். இதுமாதிரி சிக்கனிலும் ட்ரை பண்ணலாம். குக்கரில் சிக்கன் என்றால் குக்கரில் ஒரு விசில் வைத்தால் போதும்.