கடலைமா லட்டு
தேவையான பொருட்கள்:
கடலைமா - 1 கிலோ
நெய் - 750 கிராம்
அரைத்த சீனி - 750 கிராம்
உலர்ந்ததிராட்சை - 2 மேசைக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை:
கடலைமாவை சலித்து வைத்துக் கொள்ளவும்.
அடிப்பாகம் கனமாகவும், அகலமாக உள்ள பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும்.
அதில் ஒரு மேசைக்கரண்டி நெய்யை ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து வைக்கவும்.
பின்பு மிகுதி நெய்யை ஊற்றி உருக விடவும்.
நெய் உருகியதும் கடலைமாவை சிறிது சிறிதாக தூவி விடாமல் கிளற வேண்டும்.
கடலைமா வெந்து நல்ல வாசனை வரும். அப்பொழுது இறக்க வேண்டும்.
அரைத்த சீனி, வறுத்த திராட்சை, முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கட்டியில்லாமல் கிளற வேண்டும்.
கலவை ஓரளவு சூடாக இருக்கும் பொழுது விரும்பிய அளவு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
மாலை நேர தேனீருடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்புகள்:
நன்கு ஆறியதும் டப்பாவில் போட்டு மூடி வைத்தால் இரண்டு மாதம் வரை கெடாமல் இருக்கும்.