கடலைப்பருப்பு லட்டு
0
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு (வறுத்தது) - 2 கப்
சீனி (தூளாக்கியது) - ஒன்றரை கப்
நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு(கஜூ)- கால் கப்
நெய்யில் வறுத்த பிளம்ஸ் - கால் கப்
ஏலக்காய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
நெய் / பட்டர் / மாஜரின் - அரை கப்
செய்முறை:
கடலைப்பருப்பை மாவாக்கி அதனுடன், நெய்யில் வறுத்த கஜூ (முந்திரிப்பருப்பு), சீனி (தூளாக்கியது) நெய்யில் வறுத்த பிளம்ஸ், ஏலக்காய் (தூளாக்கியது, உப்பு ஆகியவற்றை கலந்து நெய்யை சூடாக்கி அதில் விட்டு உடனடியாக லட்டு பிடிக்கவும்.
குறிப்புகள்:
கடலைப்பருப்பு லட்டு செய்வதற்கு இலகுவானதும் சுவையானதுமான ஓர் இனிப்பு வகையாகும். எச்சரிக்கை - சர்க்கரை நோயாளர், இருதய நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்