கடலைப்பருப்பு துவையல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 100 கிராம்

தேங்காய்ப்பூ - அரைப்பாதி

பச்சைமிளகாய் - (15 - 20)

உப்பு - தேவையான அளவு

சின்ன வெங்காயம்(சிறிதாக நறுக்கிய) - 10

கறிவேப்பிலை - சிறிதளவு

கடுகு - ஒரு தேக்கரண்டி

பெருஞ்சீரகம்(fennel) - 2 சிட்டிகை

எண்ணெய்- 2 மேசைக்கரண்டி

தண்ணீர் - தேவையான அளவு

தேசிக்காய்(எலுமிச்சம்காய்)சாறு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

கடலைப்பருப்பை நன்றாக கழுவி துப்பிரவு செய்து ஒரு தட்டில் அதனை போட்டு காயவிடவும்.

கடலைப்பருப்பு காய்ந்த பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கவும்.

சூடாக்கிய பின்பு அதில் காய்ந்த கடலைப்பருப்பினை போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.

வறுத்தெடுத்த பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக ஆறவிடவும்.

ஆறிய பின்பு கடலைப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து 3 மணித்தியாலம் ஊறவிடவும்.

ஊறிய கடலைப்பருப்பை கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு அதனுடன் தேங்காய்ப்பூ, பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து 3/4 பதமாக அரைக்கவும்.

அரைத்த பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கவும்.

தாட்சியை(வாணலியை) சூடாக்கிய பின்பு அதில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் கடுகைப்போட்டு வெடிக்கவிடவும்.

கடுகு வெடித்ததும், சிறிதாகவெட்டியவெங்காயம், கறிவேப்பிலை, பெருஞ்சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

தாளித்த பின்பு அதில் தேங்காய்ப்பூ பச்சைமிளகாய் சேர்த்து அரைத்த கடலைப்பருபை போடவும்.

எல்லாவற்றையும் நன்றாக சேர்த்து கலக்கவும். பின்பு அதனை நன்றாக கொதிக்கவிடவும்.

நன்றாக கொதித்த பின்பு அதனுடன் உப்பை சேர்த்து நன்றாக கலந்த பின்பு அதனை ஒரு நிமிடங்கள் அப்படியே விடவும் .

ஒரு நிமிடங்களின் பின்பு அதனுடன் தேசிக்காய்(எலுமிச்சம்பழம்)சாறு விட்டு கலந்து ஒரு நிமிடங்கள் அப்படியே விடவும்.

அதன் பின்பு சுவையான சத்தான கடலைப்பருப்பு துவையல் தயாராகி விடும்.

தயாராகிய கடலைப்பருப்பு துவையல் உள்ள பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி கடலைப்பருப்பு துவையலை வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறவிடவும்.

சூடு ஆறிய பின்பு ஒரு தட்டில் இடியப்பம், சோறு(சாதம்), புட்டு, தோசை, இட்லி, பாண் ஆகியவற்றில் ஒன்றுடன் கடலைப்பருப்பு துவையலை வைத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

கடலைப்பருப்பில் கார்போஹைட்ரேட், சீனி(சர்க்கரை)நார்சத்துக்கள், கொழுப்பு, புரதம், நீர்,வைட்டமின் A,B1,B2,B3B5,B6,B9,B12,C,ஏ,K, கால்சியம், இரும்பு, மெக்னீஸியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் போன்றபலசத்துக்கள் காணப்படுகிறது. இப்படிப்பட்ட கடலைப்பருப்புடன் மினரல் சத்தும்,சு வையும் சேர்ந்து காணப்படுவதே கடலைப்பருப்பு துவையலாகும். இதனை செய்து சாப்பிட்டு இதன் சுவையை அறியவும். எச்சரிக்கை - இருதயநோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். மாற்று முறை - தேங்காய்ப்பூவிற்கு பதிலாக வறுத்த உளுத்தம்பருப்பை கடலைப்பருப்பு பச்சைமிளகாயுடன் சேர்த்து அரைக்கவும். தேங்காய்ப்பூ சேர்க்காவிட்டால் பச்சை மிளகாயின் அளவை குறைத்தும் உளுத்தம் பருப்பு (25 - 100)கிராம் பாவிக்கவும்.