கச்சி சிக்கன் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - அரை கிலோ சிக்கன் - ஒரு கிலோ வெங்காயம் - 4 தக்காளி - 4 உருளை - 2 தயிர் - 2 கப் பச்சை மிளகாய் - 4 இஞ்சி பூண்டு விழுது - 4 மேசைக்கரண்டி மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி சீரகம் - ஒரு மேசைக்கரண்டி மிளகு - அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 2 மேசைக்கரண்டி ஷாஹி ஜீரா - 2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி எலுமிச்சை சாறு - அரை கப் மிளகு
ஏலக்காய்
பிரிஞ்சி இலை
பட்டை
நெய் - அரிசியுடன் வேகவைக்க நெய்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை சுத்தம் செய்து தயிர்
இஞ்சி பூண்டு விழுது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
மிளகு
எலுமிச்சை சாறு
பொடியாக நறுக்கிய தக்காளி
நீளமாக நறுக்கிய வெங்காயம் ஒன்றும் சேர்த்து பிசறி வைக்கவும். குறைந்தது அரை மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும்.
மீதமுள்ள வெங்காயத்தை நீளமாக நறுக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். உருளையையும் பொரித்தெடுக்கவும். உருளையை பொரிப்பதற்கு முன் சதுர துண்டுகளாக்கி உப்பு நீரில் ஊற வைத்த பின்னர் பொரிக்கவும். பொரிக்க பயன்படுத்திய மீதமுள்ள எண்ணெயை சிக்கனில் ஊற்றி விடவும்.
அரிசியை கழுவி அரிசியுடன் வேக வைக்க கொடுத்துள்ள மசாலா சாமானுடன் அரை பதமாக வடித்து வைக்கவும்.
நெய் (சிறிதளவு ஒன்று அல்லது இரண்டு மேசைக்கரண்டி) ஊற்றி சூடானதும் சீரகம்
ஷாஹி ஜீரா
ஏலக்காய் சேர்த்து பொரிய விடவும். பொரிந்ததும் ஊற வைத்துள்ள சிக்கன் மற்றும் மசாலாவை சேர்த்து பாதி வேக்காடாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
தம் போடும் பாத்திரத்தில் ஒரு லேயர் சிக்கன் கலவையை போட்டு அதற்கு மேல் ஒரு லேயர் அரிசியை போட்டு அதற்கு மேல் பொரித்த வெங்காயம் மற்றும் உருளையை போடவும். இதே போல் மாறி மாறி செய்யவும். கடைசி லேயர் அரிசியாக இருத்தல் அவசியம். மேலே நான்கு கப் தண்ணீர் ஊற்றி தம் போடவும். முப்பது நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான கச்சி சிக்கன் பிரயாணி ரெடி.