ஓரியண்டல் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி - ஒரு கப் வெங்காயம் - ஒன்று பச்சை மிளகாய் - 3 கலங்கல் இஞ்சி (அ) இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 7 பல் கார்ன்

பச்சை பட்டாணி கலவை - கால் கப் லைட் சோயா சாஸ் - கால் தேக்கரண்டி ஸ்டிர் ப்ரை சாஸ் - கால் தேக்கரண்டி கெட்டி தேங்காய் பால் - 3 தேக்கரண்டி வெங்காய தாள் - சிறிது காரட் - 100 கிராம் பீன்ஸ் - 100 கிராம் மட்டன் கீமா - 50 கிராம் உப்பு

மிளகு தூள் - தேவைக்கு ஏற்ப எண்ணெய்

நெய் - தேவைக்கு ஏற்ப எலுமிச்சை சாறு - தேவைக்கு ஏற்ப புதினா

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறி நறுக்கவும். காய்களை நீளமாக நறுக்கவும்.

கடாயில் எண்ணெய்

நெய் ஊற்றி கலவை சூடானதும் புதினா

பூண்டு

இஞ்சி

வெங்காயம்

பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் காரட்

பீன்ஸ்

பட்டாணி

மட்டன் கீமா

கார்ன் சேர்த்து வதக்கவும்.

பின்பு சோயா சாஸ்

ஸ்டிர் ப்ரை சாஸ்

கெட்டி தேங்காய் பால்

எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

அடுப்பை சிறுதீயில் வைத்து பாஸ்மதி அரிசி சேர்க்கவும்.

பின்பு மிளகு தூள்

தேவைக்கு ஏற்ப உப்பு

தண்ணீர்

கொத்தமல்லி தூவி கிளறி வேக வைக்கவும்.

வெங்காயத் தாளை பொடியாக நறுக்கி சேர்த்து சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: