ஓம முறுக்கு
தேவையான பொருட்கள்:
கடலை மா - 1 1/2 கப்
மைதா மா - 1/2 கப்
ஓம பவுடர் - 4 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
எள்ளு - 3 மேசைக்கரண்டி
தேங்காய்ப்பால் - 1 கப்
உப்பு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
மைதாமாவை ஆவியில் 10 - 15 நிமிடங்கள் அவித்து அரித்து ஆறவிடவும்
தேங்காய்ப்பாலை காய்ச்சவும்
அவித்த மைதா மா, கடலைமா, ஓமம், மிளகாய்த்தூள், உப்பு, எள்ளு சேர்த்து கலக்கவும்.
இதனுள் சூடான தேங்காய்ப்பாலை சிறிது சிறிதாக விட்டு குழைக்கவும். (தேங்காய்ப்பால் போதவில்லையாயின் சிறிது சுடுதண்ணீரும் சேர்க்கலாம்)
குழைத்த மாவை முருக்கு உரலினுள் போட்டு நட்சத்திர அச்சு வழியாக முறுக்குகளாக பிழிந்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.
சுவையான ஓம முறுக்கு தயார்.
குறிப்புகள்:
முறுக்கு உரல்/அச்சு இல்லாவிட்டால் நட்சத்திர ஐஸிங் நொஸிலாலும் போடலாம். ஒரு ஐசிங் பை (Icing bag) அல்லது zip-log பையின் மூலையை வெட்டி அதனுள் நொசிலை வைத்து பையினுள் மாவை நிரப்பி முறுக்கு பிழியலாம். மைதாவை அவிப்பதற்கு பதிலாக வறுத்து ஆறவிட்டும் சேர்க்கலாம்.