ஓட்ஸ் ஸ்ட்ராபெர்ரி போரிட்ஜ் (6 மாத குழந்தைக்கு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 2 தேக்கரண்டி ஸ்ட்ராபெர்ரி - 2 பால் - கால் கப் ( ஃபார்முலா பால்)

செய்முறை:

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

ஸ்ட்ராபெர்ரியை மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

ஓட்ஸை வெறும் கடாயில் ஒரு நிமிடம் சூடாக்கி விட்டு அதனுடன் பால் சேர்க்கவும்.

ஓட்ஸ் வேகும் வரை கைவிடாமல் (அடிப்பிடிக்காதிருக்க) கிளறவும்.

ஓட்ஸ் வெந்ததும் மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் நறுக்கிய ஸ்ட்ராபெர்ரியை சேர்த்து கலந்து விடவும்.

சுவையான ஓட்ஸ் ஸ்ட்ராபெர்ரி போரிட்ஜ் தயார். குழந்தைகளுக்கு ஆறு மாதம் முதல் இதை காலை நேர சிற்றுண்டியாக கொடுக்கலாம்.

குறிப்புகள்: