ஒரேஞ் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மா (மைதா)- 11/2 கப்

சீனி - 3/4 கப்

ஒரேஞ் ஜூஸ் - 1 கப்

பொடித்த கஜு - 1/4 கப் (விரும்பினால்)

ரெய்சின் - 25 (விரும்பினால்)

பட்டர் - 1/2கப்

பேகிங் சோடா - 11/2தேக்கரண்டி

உப்பு - 1/4 டீஸ்பூன்

ஒரேஞ் ரைன்ட்(Rind) - 1 முழு ஒரேஞ் பழத்திலிருந்து எடுத்தது.

8" கேக் பான் - 1

பேகிங் ஸ்பிரே

செய்முறை:

கேக் பானிற்கு பேகிங் ஸ்பிரே தடவி வைக்கவும்.

கோதுமை மா, உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து 3 தடவை அரிக்கவும் (சலிக்கவும்)

சீனி, உருக்கிய பட்டர் சேர்த்து கிரைண்டரில் நன்கு அடிக்கவும்.

பின்னர் ஒரேஞ் ஜூஸை சீனியுடன் சேர்த்து அடிக்கவும்.

பின்னர் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் இந்த கலவையை போட்டு அதனுள் மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். (அடிக்க வேண்டாம்)

பின்னர் பொடித்த ஒரேஞ் ரைன்ட், கஜு, ரெய்சின் சேர்த்து கலக்கவும்.

பின்னர் இந்த கலவையை கேக் பானில் ஊற்றி 350 Fஇல் 30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.

குறிப்புகள்:

ஒரேஞ் ஜூஸ் குளிராக இருந்தால் சிறிது சூடாக்கி பின்னர் பாவிக்கவும். ப்ரஷ் ஜூஸ் பாவிக்கலாம். ஒரேஞ் ஜூஸிற்கு பதிலாக லெமன் ஜூஸும் பாவிக்கலாம் (லெமன் கேக்).

----

இதையே லேயர் கேக்காக செய்வதற்கு: இரு 8" கேக் செய்து ஒரு கேக்கின் மேல் பட்டர் ஐஸிங்கை சுற்றிவர போட்டு நடுவில் ஒரேஞ் மார்மலேட் ஃபில் பண்ணி அதன் மேல் மற்றைய கேக்கை வைத்து மூடி பட்டர் ஐஸிங்கால் அழகு படுத்தவும்.