ஒரேஞ்பன்ச்
0
தேவையான பொருட்கள்:
தோடம்பழச்சாறு (ஜுஸ்) - 2 கப்
தேசிக்காய்சாறு (லெமன் ஜூஸ்) - கால் கப்
இஞ்சிச்சாறு - ஒரு மேசைக்கரண்டி
சீனி (சர்க்கரை) - 3 மேசைக்கரண்டி
ஐஸ் கட்டி - 2 கப்
செய்முறை:
தோடம்பழச்சாறு (ஜுஸ்) தேசிக்காய்சாறு, இஞ்சிச்சாறு எல்லாவற்றையும் ஒன்றாக கரைக்கவும்.
அதனுடன் சீனியை (சர்க்கரை) கலந்து நன்கு கரைக்கவும். பின்பு ஐஸ்கட்டியை உடைத்து (சிறு கட்டிகளாக) கலந்து பரிமாறவும்.
குறிப்புகள்:
புத்துணர்ச்சியை அதிகரிக்க செய்யும். வேலைப்பாடு நிறைந்த ஜூஸ் கிளாசில் இந்த ஜூஸை ஊற்றிக்கொடுத்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.