ஒடியல் பிட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஒடியல் மா - 1 கப்

உப்பு

தேங்காய்ப்பூ - 1/4 கப்

பட்டர் - 2 மேசைக்கரண்டி

சர்க்கரை (வெல்லம்) / சீனி - 4 - 5 மேசைக்கரண்டி

செய்முறை:

ஒடியல் மாவை 2 - 3 கப் தணீரில் கரைத்து ஊற விடவும்.

மா அடைந்ததும் தண்ணீரை வடித்து நீக்கி விடவும்.

இவ்வாறு 2 - 3 தடவை செய்யவும். - இதனால் மாவின் காறல் (கயர்ப்பு சுவை) எடுக்கப்பட்டுவிடும்.

பின்னர் மாவை ஒரு சுத்தமான துணியில் நன்கு பிழிந்து வடித்தெடுத்து உதிர்க்கவும்.

உதிர்த்த மாவுடன் உப்புசேர்த்து கலந்து 3-4 மேசைக்கரண்டி சுடு தண்ணீர் சேர்த்து குழைத்து மணிமணியாக உதிர்த்திக் கொள்ளவும்.

உதிர்த்திய மாவுடன் தேங்காய்ப்பூ சேர்த்து ஆவியில் வைத்து அவித்து எடுக்கவும்.

அவித்த பிட்டினுள் (சூடாக இருக்கும் போதே) துருவிய சர்க்கரை(வெல்லம்), பட்டர் சேர்த்து கலக்கவும்.

சுவையான ஒடியல் பிட்டு தயார். இதனை அப்படியே சாப்பிடலாம். பக்க உணவுகள் தேவையில்லை.

குறிப்புகள்:

பனம் பூரானை (முளை வந்த பனங்கொட்டையினுள் இருக்கும் சதைப்பகுதி - sprout)சிறிய துண்டுகளாக வெட்டி பிட்டு மாவுடன் கலந்தும் அவிக்கலாம். சுவையாக இருக்கும்.