ஒடியல் கூழ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஒடியல் மா - 500 கிராம்

பெரிய மீன் - 2

நண்டு - 4

இறால் - 1 கிலோ

மரவள்ளிக்கிழங்கு பெரியது - 1

பயத்தங்காய் - 300 கிராம்

பலாக்கொட்டை - 200 கிராம்

காய்ந்த மிளகாய் - 20-25

புளி - 75 கிராம்

உப்பு - தேவையான அளவு

தேங்காய்ச் சொட்டு - ஒரு பாதி மூடி

செய்முறை:

ஒடியல் மாவை சலித்து தண்ணீரில் கரைத்து ஒரு மணிநேரம் ஊறவிடவும்.

ஒடியல்மா அடியில் இருக்கும் தண்ணீர் மேலே தெளிந்து இருக்கு, அப்போது தண்ணீரை வெளியில் ஊற்றவும். மீண்டும் தண்ணீரை விட்டு கலந்துவிடவும். இப்படி 4 முறை செய்யவும். ஏனென்றால் அதில் உள்ள காரல் தன்மை குறைந்து விடும்.

மீன், இறால், நண்டை சுத்தப்படுத்தி கழுவி, வெட்டி வைக்கவும்.

மரவள்ளிக் கிழங்கின் தோலை உரித்து சிறு துண்டுகளாக வெட்டவும்.

பயத்தங்காயை 2 அங்குல நீளத்துண்டுகளாக ஒடித்து வைக்கவும்.

பலாக்கொட்டையை தோல் உரித்து இரண்டாகப் பிளந்து தண்ணீரில் போட்டு வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் மீனை வேகவைத்து, முள்ளை அகற்றி விடவும்.

புளியை 3 கப் நீரில் கரைத்து வைக்கவும். மிளகாயை அரைத்து வைக்கவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் விட்டு இறால், நண்டு, பயத்தங்காய், பலாக்கொட்டை, உப்பு சேர்த்து வேகவிடவும்.

அவை 1/2 பதம் வெந்ததும் மரவள்ளிக்கிழங்கைப் போடவும்.

கிழங்கு அவிந்து வர மிளகாய்த்தூள், புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்ததும் அவித்த மீனைப் போடவும். பின்பு ஒடியல் மாவை கரைத்து விடவும்.

மா வெந்து கூழ் தடிப்பானதும் இறக்கவும். சுவையான ஒடியல் கூழ் தயார்.

சுடச் சுட தேங்காய் சொட்டை கடித்துக் குடிக்க சுவையாக இருக்கும்.

குறிப்புகள்:

இலங்கையின் வடமாகாணத்தில் இக்கூழ் மிகவும் பிரபல்லியமானது. இது மிகவும் சத்து நிறைந்த உணவாகும்.

முள்ளு இல்லாத அல்லது முள்ளுக் குறைவான மீன் தான் இதற்கு நல்லது. உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப காரம், உப்பு, புளிப்பைக் கூட்டிக் குறைக்கலாம். அசைவம் சாப்பிடாதவர்கள் மேலே கொடுக்கப்பட்ட காய்கறிகளை மட்டும் சேர்த்து இக்கூழை செய்து குடிக்கலாம்.