ஒடியற்கூழ்
தேவையான பொருட்கள்:
ஒடியல்மா - 1/4 கப்
வெட்டிய பயத்தங்காய் - 1/4 கப்
வெட்டிய பலாக்காய் - 1/4 கப்
வெட்டிய பலாக்கொட்டை - 1/4 கப்
வெட்டிய உள்ளி - 1 மேசைக்கரண்டி
கீரை - 1/4 கப்
வேறு வெட்டிய மரக்கறிகள் - 1/4 கப் (கரட், மரவள்ளி, கோஸ், பூசணி)
கறித்தூள் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
புளி - நெல்லிக்காயளவு
தேங்காய்ச்சொட்டு - 3 மேசைக்கரண்டி
வறுத்த பயத்தம்பருப்பு - 3 மேசைக்கரண்டி
உப்பு
தண்ணீர்
செய்முறை:
புளியை கரைத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 2 - 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்ததும் வெட்டிய மரக்கறிகள், கீரை, தேங்காய்ச்சொட்டு, பயத்தம்பருப்பு சேர்த்து மூடி அவிய விடவும்.
மரக்கறிகள் அவிந்ததும் உள்ளி, உப்பு, புளிக்கரைசல், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் ஒடியல்மாவை 1/4 கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி கிளறவும்.
மா வெந்து கூழ் தடிப்பானதும் இறக்கவும்.
சுவையான ஒடியற்கூழ் தயார். சூடாக பரிமாறவும்.
குறிப்புகள்:
இதற்கு பயத்தங்காய், பலாக்கொட்டை, பலாக்காய் கட்டாயம் சேர்க்க வேண்டும். அப்போதுதான் கூழ் சுவையாக இருக்கும்.