ஐஸ் கோப்பி
தேவையான பொருட்கள்:
உடனடி கோப்பி பவுடர்(Nescafe, Bru etc.) - 2 தேக்கரண்டி
பால் - 2 கப்
சீனி - 3 மேசைக்கரண்டி
சாக்லட் / கோப்பி ஐஸ்கிறீம் - 2 ஸ்கூப்
பொடித்த் கஜு/ஆமண்ட் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
பாலை காய்ச்சி குளிரூட்டவும்.
உடனடி கோப்பி பவுடர் , குளிரூட்டிய பால், சீனி சேர்த்து கிரைண்டரில் அடிக்கவும்.
இதனை உயரமான கிளாஸில் ஊற்றி 2/3 ஐஸ் கட்டிகள் சேர்த்து 1 ஸ்கூப் ஐஸ்கிறீமை மேலே போட்டு பொடியாக வெட்டிய கஜு/ஆமண்டை தூவி நீளமான கரண்டி, உறிஞ்சு குழாய் வைத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
தேவைக்கேற்ப சீனியை கூட்டி குறைக்கலாம். ஐஸ்கிறீம் சேர்க்காமலும் குடிக்கலாம். 1தேக்கரண்டி கொக்கோ பவுடரினுள் 1/2 தேக்கரண்டி ஐஸிங் சீனி அல்லது மாவாக்கிய சீனி சேர்த்து 1 1/2 மேசைக்கரண்டி சுடு தண்ணீர் சேர்த்து கரைத்து ஐஸ் கிறீம் மீது ஊற்றியும் பரிமாறலாம். பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். OR இதற்கு பதிலாக மைலோவையும் இப்படி கரைத்து ஊற்றலாம்.