ஐஸ் கச்சாங்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிவப்பு காராமணி - 1/2 கப்

ஐஸ் துருவல்(shaved ice) - 6 கப்

கேரமல் சிரப் - 1 கப்

கன்டென்ஸ்ட் மில்க் - 1 மேசைக்கரண்டி

ஜெல்லி செய்ய:

இன்ஸ்டன்ட் ஜெல்லிபவுடர் - 5கிராம் வீதம் 2 அல்லது 3 ஃப்ளேவரில்

சர்க்கரை - 1 கப்

சுகர் சிரப் செய்ய:

சர்க்கரை - 2 கப்

ஃபுட் கலர் - விரும்பிய வண்ணங்களில் சில

செய்முறை:

சிவப்பு காராமணியை 2 மணிநேரம் ஊறவைத்து கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து வேகவைக்கவும்

200மி.லி தண்ணீரில் 1/3 கப் சர்க்கரை கலந்து கரைத்து ஜெல்லி பவுடரும் கலந்து சூடாக்கி ஒரு கொதி வந்ததும் பரந்த தட்டில் ஊற்றி செட் செய்யவும்.

ஜெல்லி செட் ஆனதும் 1 செ.மீ. அளவுள்ள துண்டுகளாக்கி தயாராக்கவும்.

இதே போல் மீதமுள்ள ஃப்ளேவர்களிலும் செய்து தயாராக்கவும்.

சுகர் சிரப் செய்ய 2கப் சர்க்கரையோடு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பிசுபிசுப்பு பதம்(குலோப்ஜாமூன் பதம்) வந்ததும் இறக்கி ஆறவிடவும்.

இந்த சிரப்பை மூன்று பாகங்களாக பிரித்து வேண்டிய ஒவ்வொரு பாகத்திலும் வெவ்வேறு நிறங்கள் சேர்த்து கலக்கவும்.

பரிமாறும் டிசர்ட் பவுலில் வேகவைத்த காராமணி 2 மேசைக்கரண்டி, ஜெல்லி துண்டுகள் 2 மேசைக்கரண்டி சேர்த்து 2 மேசைக்கரண்டி கேரமல் சிரப் ஊற்றவும்.

இதன் மேல் சுமார் ஒன்றரை கப் ஐஸ் துருவலை கோபுரம் போல் போட்டு கையால் லேசாக அழுத்தி கூம்பு போன்ற வடிவத்தில் செய்யவும்.

செய்து வைத்திருக்கும் பல வண்ண சுகர் சிரப்பையும், கேரமல் சிரப்பையும் ஒவ்வொன்றும் ஒன்றரை மேசைக்கரண்டி வீதம் ஐஸின் மேல் பரவலாக ஊற்றவும்.

மேலே ஒரு மேசைக்கரண்டி கன்டென்ஸ்ட் மில்க் ஊற்றவும்.

மேலிருந்து கீழாக கோடுகளாக வண்ணங்கள் மாற்றி மாற்றி ஊற்றினால் பார்க்க அழகாக இருக்கும். கலர்ஃபுல் ஐஸ் கச்சாங் ரெடி.

குறிப்புகள்:

காராமணி மற்றும் ஜெல்லி துண்டுகளோடு விரும்பிய பழத்துண்டுகளும் சேர்க்கலாம். மீதி வரும் சிரப்பை பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது பயன்படுத்தலாம். பார்ட்டிகளுக்கு எல்லாமே முதல் நாள் தயாராக்கி வைத்துக் கொண்டு அவ்வப்போது செட் செய்து பரிமாறலாம். அவரவர் விருப்பம் போல் ஐஸின் அளவை குறைக்கலாம். அப்போது சேர்க்கும் சுகர் சிரப்புகளின் அளவையும் குறைத்துக் கொள்ளவும்.