ஐஸ் ஆப்பிள் பாதாம் கீர்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நுங்கு (ஐஸ் ஆப்பிள்) - 15

பால் - 200 மில்லி லிட்டர்

முந்திரிப்பருப்பு (கஜு)(அரைத்தது) - 50 கிராம்

ஏலக்காய் - 2

உப்பு - 2 சிட்டிகை

சீனி(சர்க்கரை) - தேவையானளவு

பாதாம் எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

ஐஸ் ஆப்பிளை (நுங்கை) பொடி பொடியாக வெட்டவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் பாலை ஊற்றி காய்ச்சவும்.

காய்ச்சிய பாலில் அரைத்த முந்திரிப்பருப்பு(கஜு), சீனி(சர்க்கரை) ஆகியவற்றை கலக்கவும்.

கலந்த பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும் .

பால் நன்றாக கொதித்ததும் அடுப்பிலிருந்து பால் பாத்திரத்தினை இறக்கவும்.

அடுப்பிலிருந்து இறக்கிய பாலை ஆறவிடவும்.

பால் ஆறிய பின்பு அதனுடன் பொடிபொடியாக வெட்டிய ஐஸ் ஆப்பிள்(நுங்கு), ஏலக்காய், உப்பு, பாதாம் எசன்ஸ் ஆகியவற்றை சேர்க்கவும்.

பின்பு குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர வைக்கவும். இக்கலவை தேவையானளவு குளிர்ந்ததும் பரிமாறவும். இக்கலவையானது தேவையான அளவு குளிர்ந்ததும் பரிமாறவும்.

குறிப்புகள்:

உடலிலுள்ள அதிகப்படியான சூட்டைத் தணிக்கும் ஸ்பெஷல் கீர் அத்துடன் இதில் பல வகையான சத்துக்கள் அடங்கியுள்ளது. எச்சரிக்கை - சர்க்கரைநோயாளர், ஐஸ் ஆப்பிள்(நுங்கு) அலர்ஜி உள்ளவர்கள், இதயநோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - ஐஸ் ஆப்பிளை (நுங்கை)பொடிபொடியாக வெட்டவும்