என்சிலாடா
தேவையான பொருட்கள்:
ரீஃப்ரைட் பீன்ஸ் - ஒரு டின் டார்ட்டில்லா - 5 முதல் 8 வரை என்சிலாடா சாஸ் - ஒரு டின் துருவிய சீஸ் - 3/4 முதல் 1 கப் வரை டாக்கோ சீசனிங் பவுடர் - ஒரு சிறிய பாக்கெட் அலங்கரிக்க: கொத்தமல்லி இலைகள் சவர் க்ரீம் சிறிது
செய்முறை:
தேவையானவைகளை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். அவனை 350 டிகிரி முற்சூடு செய்து வைக்கவும்.
ரீஃப்ரைட் பீன்ஸ் டின்னில் இருந்து பீன்ஸை எடுத்து
இதனுடன்
இரண்டு மேசைக்கரண்டி அளவு டாக்கோ சீசனிங் பவுடர் சேர்த்து
கலந்துவிட்டு மைக்ரோவேவ் அவனில் வைத்து 2 நிமிடம் சூடாக்கி எடுத்துக் கொள்ளவும். (மைக்ரோவேவ் இல்லையென்றால்
அடுப்பில் வைத்தும் சூடு செய்து எடுத்துக் கொள்ளலாம்)
அடுத்து
ஒரு தட்டில் பாதி என்சிலாடா சாஸை ஊற்றி தயாராக வைக்கவும்.
ஒரு தவாவை அடுப்பில் வைத்து
டார்ட்டில்லாவை போட்டு இரண்டு பக்கமும் லேசாக சூடுப்படுத்தி
தட்டில் ஊற்றி வைத்திருக்கும் சாஸின் மீது வைக்கவும்.
இதன் மேலே
கலந்து வைத்திருக்கும் பீன்ஸ் கலவையை சுமார் 2 மேசைக்கரண்டி அளவுக்கு வைக்கவும்.
இரண்டு பக்கத்திலிருந்தும்
டார்ட்டிலாவை மடித்து லேசான இறுக்கம் கொடுத்து சுருட்டி வைக்கவும்.
இதே போல எல்லா டார்ட்டில்லாவையும் சுருட்டி
நாண்ஸ்டிக் ஸ்ப்ரே செய்த ஒரு பேக்கிங் டிஷ்/ட்ரேயில் நெருக்கமாக அடுக்கவும்.
பிறகு இதன் மேலே மீதி உள்ள சாஸ் முழுவதையும் எல்லா டார்ட்டிலாவின் மேலும் படுமாறு பரவலாக ஊற்றவும். பிறகு சீஸ் துருவலை எல்லா இடங்களிலும் சமமாக இருக்குமாறு தூவி விடவும்.
அடுத்து
ஒரு அலுமினிய ஃபாயிலை எடுத்து
பேக்கிங் ட்ரேவை இறுக்கமாக மூடி
ஓரங்களை சுற்றி மடித்து விடவும்.
இதனை முற்சூடு செய்த அவனில் வைத்து
15 - 18 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுக்கவும். திறந்து பார்க்கும் போது மேலே தூவிய சீஸ் நன்றாக உருகி வந்திருப்பது தெரியும்.
இதன் மேலே
கொத்தமல்லி/வெங்காயத்தாள் மெலிதாக நறுக்கி அலங்கரித்து கொள்ளவும். பரிமாறும் போது ஒரு மேசைக்கரண்டி
சவர் க்ரீமுடன் சேர்த்து பரிமாற சுவையான வெஜிடேரியன் என்சிலாடா ரெடி!