எக் சீஸ் ப்ரெட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - 1

ஸ்பிரெட்டட் சீஸ் - 2-3 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

வெங்காயம் - 1

உப்பு - சிறிது

ப்ரெட் ஸ்லைஸ் - 4

செய்முறை:

வெங்காயம், மிளகாய் மெலிதாக கட் செய்து கொள்ளவும். ப்ரெட் துண்டுகளாக கட் செய்து வைக்கவும்.

மைக்ரோவேவ் ப்ரூஃப் பவுலில் முட்டை பீட் செய்து, வெங்காயம், மிளகாய், உப்பு, சீஸ், ப்ரெட் துண்டுகள் சேர்த்து மிக்ஸ் செய்து 2-3 நிமிடம் வைத்து எடுக்கவும்.

சுவையான எக் சீஸ் ப்ரெட் ரெடி.

குறிப்புகள்:

சில நிமிடங்களில் செய்யக்கூடிய சத்தான உணவு. பேச்சுலர்ஸ் காலை, இரவு வேளைக்கு செய்து சாப்பிடலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும், மிளகாய் பதில் மிளகுத்தூளும் சேர்க்கலாம்.