எக்லெஸ் கேரமல் கஸ்டர்ட்
தேவையான பொருட்கள்:
பால் - 2 1/4 கப்
கஸ்டர்ட் பவுடர் - 3 தேக்கரண்டி
அகர் அகர் / சைனா கிராஸ் - 5 கி
சர்க்கரை - 4 மேஜை கரண்டி
வெனிலா எசன்ஸ் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1 மேஜை கரண்டி சர்க்கரையில் ஒரு தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து கேரமல் செய்து,அதை கஸ்டர்ட் கப்களில் ஊற்றி ஆற விடவும்.
அகர் அகரை சிறிது தண்ணீரில் ஊறவைக்கவும்.பின்னர் ஒரு கப் தண்ணீரில் நன்றாக கரையும் வரை கொதிக்க வைத்து,வடிகட்டி கொள்ளவும்.
1/2 கப் பாலில் கஸ்டர்ட் பவுடரை நன்றாக கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்.
மீதி பாலை கொதிக்க வைத்து,சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
பால் கொதிவரும் போது,கஸ்டர்ட் கலந்த பாலை சேர்த்து,கட்டி இல்லாமல் கிளறவும்.
இதனுடன் அகர் அகர் நீரை சேர்த்து கலக்கவும்.இப்போது வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்.
இதனை கஸ்டர்ட் கப்களில் ஊற்றி அரை மணி நேரம் ஆற விட்டு, ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும்,சர்விங் ப்ளேட்டில் கவிழ்த்து பரிமாறலாம்.
எக்லெஸ் கேரமல் கஸ்டர்ட் தயார்.
குறிப்புகள்:
ஃப்ளான் என்பது மெக்ஸிகன் டெஸர்ட்.(ஸ்பானிஷ் கஸ்டர்ட்).இதனை பல முறைகளில் செய்யலாம்.கண்டென்ஸ்ட் மில்க்,விப்பிங் க்ரீம் சேர்த்து செய்யும் முறையும் உள்ளது.எக்லெஸ் கேரமல் கஸ்டர்ட்டில் முட்டைக்கு பதிலாக ”அகர் அகர்” சேர்த்தால் தான் கஸ்டர்ட் கெட்டியாகி ஃப்ளான் போன்று கிடைக்கும். கஸ்டர்ட் பவுடரில் வெனிலா ஃப்ளேவர் பயன்படுத்தினால் தனியே எசன்ஸ் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.