உருளைக்கிழங்கு பிரிட்ஸ்
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - ஒரு கிலோ
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை தோல் சீவி மெல்லிய நீள் துண்டுகளாக வெட்டவும். அதை தண்ணீரில் கழுவி ஸ்டார்ச் எடுத்து துணியில் துடைத்து சிறிது நேரம் காயவிடவும்.
அதன் பின்பு எண்ணெய் சிறிதளவு அதன் மேல் பூசி திரும்பவும் காய விடவும். நன்றாக காய்ந்ததும் காற்று போகாத பையில் அல்லது டப்பாவில் போட்டு காற்று போகாதவாறு இறுக்கி மூடி (இறுக்கி கட்டி) குளிர்சாதனப் பெட்டியில் (டீப் ஃப்ரீசரில்) வைக்கவும்.
தேவையான நேரங்களில் தாச்சியில் (காடாயில்) எண்ணெயை சூடாக்கி அதில் தேவையான அளவு பிரிட்ஸ்களை போட்டு தேவையான பதத்திற்கு பொரித்தெடுத்து விரும்பினால் காரம் சேர்க்கலாம். இல்லாவிட்டால் தக்காளிப்பழ கெட்சப் சாஸ்ஸுடன் சேர்த்து பரிமாறலாம்.
குறிப்புகள்:
மாச்சத்து நிறைந்த உணவு (கார்போஹைட்ரேட்) செய்வதோ சுலபம் சுவையோ சுவை சிறுவர்கள் முதல் வயோதிபர் வரை விரும்பி உண்ணும் உணவு. வயோதிபர், நோயாளர், உடல் பருமனானவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்பது சிறந்தது.