உருளைக்கிழங்கு சாலட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு (வேகவைத்துமசித்த(குழைத்த)) -2கப்

பச்சைமிளகாய் (வெட்டிய) - 2 தேக்கரண்டி

இஞ்சி (வெட்டிய) - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தயிர் (புளிக்காதது) - 2 கப்

கடுகு - 2 தேக்கரண்டி

சீரகம் - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

வெங்காயம் - அரைப்பாதி

கறிவேப்பிலை - 5 இலைகள் (சிறிதாக வெட்டியது)

தேசிக்காய்சாறு(லெமன்(லைம்)ஜூஸ்) - அரை தேக்கரண்டி

செய்முறை:

தயிர், உப்பு, மசித்த உருளைக்கிழங்கு இவையாவற்றையும் கலந்து வைக்கவும்

வாணலியில்(தாச்சியில்) எண்ணெய் கொதித்ததும் (காய்ந்தது) கடுகு, சீரகம், வெங்காயம் போட்டு அது பொரிந்ததும் இஞ்சி, பச்சைமிளகாய் போட்டு தாளிக்கவும்.

தாளித்தவற்றை உருளைக்கிழங்கு கலவையில் போடவும். பின்பு கறிவேப்பிலை போட்டு கலக்கவும்.

பின்பு தேசிக்காய்சாறு (லெமன்(லைம்) ஜுஸ் போட்டுக்கலக்கவும்

இதோ சுவையானதும் மாச்சத்து நிறைந்ததுமான உருளைக்கிழங்கு சாலட் தயார்.

குறிப்புகள்:

சிறுவர்களுக்கு பிடித்த உணவு அத்துடன் மாச்சத்து நிறைந்த உணவு. தேசிக்காய்சாறு( லெமன்(லைம்)ஜுஸ்) போட்டுக்கலக்கவும் கலந்தவுடன் பரிமாறவும் இல்லாவிட்டால். அது பழுதாகிவிடும்.