உம்ம் அலி
தேவையான பொருட்கள்:
ஃபுரோசென் பஃப் பேஸ்ட்ரி (ஷீட்ஸ்) - 10 பசும்பால் - 2 கப் சர்க்கரை - அரை கப் கன்டெண்ஸ்ட் மில்க் - 3 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய நட்ஸ் (ஆல்மன்ட்
பிஸ்தா) - 5 தேக்கரண்டி வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி வெனிலா எசன்ஸ் (இல்லையென்றால் தவிர்க்கலாம்) - 2 சொட்டு
செய்முறை:
பஃப் பேஸ்ட்ரியை அவன் ட்ரேயில் பரப்பி வைத்து 20 லிருந்து 30 நிமிடங்கள் வரை (அவனில் சூட்டைப் பொறுத்து) நல்ல மொறுமொறுப்பாக பேக் செய்து கொள்ளவும்.
பிறகு அதனை சின்ன சின்னதாக பிய்த்து வைக்கவும்.
பாலை கொதிக்க வைத்து
சர்க்கரை
வெண்ணெய் சேர்க்கவும். தீயை அணைத்து இறக்கி வைத்து கன்டெண்ஸ்ட் மில்க்
வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்.
ஒரு பெளலில் பஃப் பேஸ்ட்ரியை நிரப்பி வைக்கவும். அதில் பாதி அளவு பால் சேர்த்து நட்ஸ் தூவி பேஸ்ட்ரியை பாலில் முழுக்கும்படி அமுக்கி விடவும்.
பெளலை அவனில் மேலும் 10 நிமிடங்கள் மேல் பாகம் சிவக்கும்படி வைக்கவும். இதனை சூடாகப் பரிமாறவும்