உடனடி Ziti பாஸ்தா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

Ziti பாஸ்தா - 1 கப்

தக்காளி பேஸ்ட் - 4 மேசைக்கரண்டி

பார்மஜான் சீஸ் - 4 மேசைக்கரண்டி

மொற்சரில்லா சீஸ் - 1/4 கப்

பொன்டீனா சீஸ் - 4 மேசைக்கரண்டி

பட்டர் - 1 மேசைக்கரண்டி

ஒலிவ் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

தண்ணீர் - 4 - 5 மேசைக்கரண்டி

மிளகுதூள்

உப்பு

காய்ந்த ஒரெகானோ - 1/2 தேக்கரண்டி

காய்ந்த பேஸில் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் பிளேக்ஸ் - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

பாஸ்தாவை மூழ்கும்வரை தண்ணீர் விட்டு உப்பு போட்டு அவித்து வடிகட்டி எடுக்கவும்.

அவனை 375 F இல் முற்சூடு பண்ணவும்.

ஒரு பேக்கிங் தட்டிற்கு பேக்கிங் ஸ்பிறே அல்லது பட்டர் பூசி வைக்கவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கி மைக்ரோவேவில் 2 நிமிடங்கள் சூடாக்கி எடுக்கவும்.

பின்னர் இதனுள் அவித்த பாஸ்தாவைப் போட்டு நன்கு கிளறவும்.

பின்னர் இந்த கலவையை பேக்கிங் பானில் கொட்டி சீராக பரவி விடவும்.

பின்னர் முற்சூடு படுத்திய அவனில் 15 - 20 நிமிடங்கள் அல்லது சீஸ் உருகி பொங்கும் வரை (மேற்புறம் சிறிது பிரவுண் நிறமாக மாறும் வரை) விட்டு எடுக்கவும்.

சுவையான பாஸ்தா தயார். இதனை சிறிது ஆறவிட்டு பரிமாறவும்.

குறிப்புகள்:

இதனை Bow-tie பாஸ்தா, பெனே பாஸ்தாவிலும் செய்யலாம்.