ஈஸி பீஸா
தேவையான பொருட்கள்:
பீஸா பேஸ் – ஒன்று பெரிய தக்காளி – ஒன்று வெங்காயம் – ஒன்று குடை மிளகாய் – ஒன்று சீஸ் வெண்ணெய் மிளகு தூள் – 2 சிட்டிகை உப்பு - 2 சிட்டிகை
செய்முறை:
வெங்காயம்
தக்காளி
குடைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முதலில் பீஸா பேஸில் வெண்ணெய் தடவிக் கொள்ளவும்.
பின் அதன் மேல் தக்காளி சாஸை ஊற்றி பரவலாக தடவி கொள்ளவும்.
பின் வெங்காயத்தை அதன் மேல் பரவலாக தூவவும்.
அடுத்து தக்காளியை தூவவும். தக்காளி கொஞ்சம் குறைவாக இருந்தால் போதும்.
அடுத்து குடைமிளகாயை மேலாக தூவி விடவும்.
பின் தேவையான அளவு சீஸை முழுவதுமாக பரப்பவும். அதன் மேல் மிளகு தூளையும் உப்பையும் தூவவும்.
அவனில் க்ரிலில் 200 டிகிரி வைத்து தயார் செய்த பீஸாவை உள்ளே வைக்கவும். நன்கு கலர் மாறியவுடன் எடுத்து விடவும்.
சுவையான விரைவில் செய்யகூடிய பீஸா ரெடி.