ஈஸி பட்டர் கேக்
தேவையான பொருட்கள்:
அரித்தகோதுமைமா(மைதாமா) - 500 கிராம்
பட்டர்(உருக்கிய) - 500 கிராம்
பேக்கிங் பவுடர் - 4 தேக்கரண்டி
சீனி - 450 கிராம்
முட்டை - 8 முட்டை
பிளம்ஸ் - சிறிதளவு
முந்திரி கொட்டை(cashsew) - சிறிதளவு
வெனிலா - 4 தேக்கரண்டி
செய்முறை:
கிரைண்டரில் (மிக்ஸியில்)சீனி, முட்டை ஆகியவற்றை போட்டு சீனி கரையும் வரை நன்றாக அடிக்கவேண்டும்.
பின்பு ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் உருக்கியபட்டர் அடித்த சீனி முட்டை கலவை ஆகியவற்றை போட்டு நன்றாக கேக் அடிக்கும் பீட்டரினால்(15 -20)நிமிடங்கள் அடிக்கவும்.
அந்த கலவையுடன் அரித்தகோதுமைமா(மைதாமா), பேக்கிங் பவுடர் ஆகியவற்றை போட்டு கேக் பீட்டரினால் அடித்து கலக்கவும்.
அதனுடன் வெனிலா, பிளம்ஸ், முந்திரிகொட்டை(cashsew) ஆகியவற்றை போட்டு கலக்கவும்.
பின்பு அளவான கேக்தட்டில் பட்டர் தடவி அதில் கேக் கலவையை தட்டின் அரை வாசி உயரத்திற்கு ஊற்றி நன்றாக பரப்பி 250 டிகிரியில் 20 நிமிடங்கள் அதன் பின்பு 200 டிகிரியில் 20அல்லது 25 நிமிடங்கள்(உங்கள் ஓவனின் வெப்ப தட்பத்தை பொறுத்து உள்ளது) பேக் செய்யவும்.
பேக் செய்த பின்பு சுவையான இலகுவான சத்துகள் நிறைந்த கேக் தயாராகி விடும்.
தயாராகிய கேக்கை விரும்பியவடிவில் வெட்டி அதனை ஒரு தட்டில் அடுக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
பட்டர் கேக் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடியதும், சுவையானதும், மாச்சத்து, கொழுப்புச்சத்து, கார்போஹைரேட்டு, இலிப்பிட்டு, புரதம் கால்சியம், வைட்டமின் B12, C, D, பாஸ்பரஸ், ஜசன், சிங்க், இரும்பு,கலியம் ஆகியசத்துகள் அடங்கியதும் செய்வதற்கு இலகுவானதுமாகும். ஆகவே இதன் சுவையை அறிய இதனை செய்து சுவைத்தறியவும்.
எச்சரிக்கை - இருதய நோயாளர், சர்க்கரைநோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். கவனிக்க வேண்டிய விசயங்கள் - அளவான கேக் தட்டில் பட்டர் தடவி அதில் கேக் கலவையை தட்டின் அரை வாசி உயரத்திற்கு ஊற்றி நன்றாக பரப்பி 250 டிகிரியில் 20 நிமிடங்கள் அதன் பின்பு 200 டிகிரியில் 20 அல்லது 25 நிமிடங்கள்(உங்கள் ஓவனின் வெப்ப தட்பத்தை பொறுத்து உள்ளது) பேக் செய்யவும். மாற்று முறை - பட்டர்(உருக்கிய)பதிலாக உருக்கிய மாஜரினை பாவிக்கலாம் .