ஈசி சிக்கன் கிரில்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் துண்டுகள் - 400 கிராம்

சிக்கன் டிக்கா அல்லது தந்தூரி மசாலா - 2டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1டீஸ்பூன்

ரெட் கலர் - பின்ச்

தயிர் - 1 டேபிள்ஸ்பூன்

லைம் ஜூஸ் - பாதி பழத்தில்

பட்டர் - 1டீஸ்பூன்(விரும்பினால்)

விரும்பினால் கசூரி மேத்தி - 2 டீஸ்பூன்(மணத்திற்கு)

உப்பு - தேவைக்கு

செய்முறை:

சுத்தம் செய்து கட் செய்த சிக்கன் துண்டுகளை நன்கு அலசி தண்ணீர் வடிகட்டி கொள்ளவும்.

அத்துடன் பட்டர் தவிர மேற்குறிப்பிட்ட அனைத்தையும் கலந்து குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறிய சிக்கனை மைக்ரோவேவ் அல்லது எலெக்ட்ரிக் அல்லது கேஸ் அவன் அல்லது தந்தூரி அடுப்பில் மீடியம் ஃப்லேமில் சுட்டு எடுக்கலாம்.ஒரு பக்கம் வெந்த பின்பு மறு பக்கம் திருப்பி வைக்க வேண்டும்.அடுப்பின் வெப்பத்தை பொறுத்து நேரம் வேறுபடும். அரைமணிக்குள் ஆகிவிடும்.

சுவையான ஈசி சிக்கன் கிரில் ரெடி.ரெடியான சிக்கனில் விரும்பினால் பட்டர் தடவி சூடாக பரிமாறலாம்.

இதனை நறுக்கிய வெள்ளரி,கேரட்,ஆனியன்,டொமட்டொ ஸ்லைஸ் உடன் பரிமாறலாம்.

குறிப்புகள்:

சிக்கன் எண்ணெயில் பொரித்து சாப்பிடுவதை விட இப்படி கிரில் செய்து சாப்பிடுவது மிக ஆரோக்கியமாகும்.