ஈசி கிட்ஸ் பாஸ்தா (1)
தேவையான பொருட்கள்:
பாஸ்தா - 2 கப்
காரட், பீன்ஸ், பட்டாணி, சோளம், பிராக்கோலி - 1கப்
மிளகு தூள் - 1/2 tsp
பூண்டு - 2
பால் - 2 tbsp
முட்டை - 1
ஆலிவ் எண்ணெய் / பட்டர் - 3 tbsp
ட்ரைட் பார்ஸ்லி - 1/4 tsp
சீஸ் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காய்கறிகளை உப்பு சேர்த்து முக்கா பதத்திற்கு ஸ்டீம் செய்து எடுத்து வைக்கவும். ரொம்பவும் வெந்து குழைந்து விடக் கூடாது.
ஆறு கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதித்ததும் பாஸ்தா சேர்த்து எட்டு முதல் பத்து நிமிடம் வேகவைக்கவும்.
(பாஸ்தா வகையை பொருத்து வேகும் நேரம் மாறலாம்)
வெந்ததும் தண்ணீரை முற்றிலும் வடிக்கட்டி வைக்கவும்.
வேகவைத்த பாத்திரத்திலே இருந்தால் ஒட்டிக் கொள்ளும் அதனால் எடுத்து வேறு ஒரு வாய் அகன்ற பாத்திரம் அல்லது தட்டில் கொட்டி வைக்கவும்.
மேலே ஒன்றிரண்டு ஸ்பூன் எண்ணெய் தெளித்து விடவும்.
ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிகவும் பொடியாக நறுக்கிய (அல்லது துருவிய) பூண்டு சேர்த்து வாசம் வரும் வரையில் வதக்கவும்.
பிறகு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.
நன்கு வெந்ததும் காய்கறிகள் மற்றும் பாஸ்தாவை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பால் சேர்த்தவுடன் மிளகு தூள் பார்ஸ்லி தூவவும். தேவைப்பட்டால் உப்பு மேலே தூவலாம்.
உடனே அடுப்பை அனைத்து மேலே சீஸ் தூவி பரிமாறவும்.
சுவையான சுலபமான கிட்ஸ் பாஸ்தா ரெடி.
குறிப்புகள்:
பால் சேர்ப்பதால் ஆறியபின் பாஸ்தா ட்ரை ஆகாமல் இருக்கும். சீஸ் முட்டை இல்லாமலும் செய்யலாம்.