இளநீர் கோழி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - அரைக்கிலோ

இளநீர் - 3 கப்

பூண்டு - 4 பல்

இஞ்சி - 1"துண்டு

உப்பு - தேவையான அளவு

டிப்பிங் சாஸ் செய்ய:

பச்சை தக்காளி(தக்காளி காய்) - 2

பச்சை மிளகாய் - 15 முதல் 20

சின்னவெங்காயம் - 3

பூண்டு - 2 பல்

உப்பு - தேவையான அளவு

சர்க்கரை(சீனி) - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

தேங்காய் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

கோழியை சுத்தம் செய்து நடுத்தர அளவு துண்டுகளாக்கவும். பாத்திரத்தில் இளநீர் விட்டு இஞ்சி பூண்டை நசுக்கி சேர்க்கவும்.

கோழித்துண்டுகள் மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும். கோழி வெந்ததும் இறக்கி வைக்கவும்.

டிப்பிங் சாஸ் செய்ய:

எண்ணெய் தவிர மற்ற பொருட்கள் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும். (இடிகல்லில் அல்லது அம்மியில் அரைத்தால் சுவை நன்றாக இருக்கும்)

வாணலியில் எண்ணெய் சூடாக்கி அரைத்த கலவையை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

இறக்கியதும் தேங்காய் எண்ணெய் கலந்து இளநீரில் வேகவைத்த சூடான கோழியுடன் பரிமாறவும்.

குறிப்புகள்:

இந்தோனேசியாவில் ஒரு உணவகத்தில் சாப்பிட பிடித்துப்போய் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். கோழியை இளநீரில் வேக வைப்பதால் பஞ்சு போன்று மிக மென்மையாக இருக்கும். காரமான டிப்பிங் சாஸில் முக்கி சாப்பிட்டால் சுவையாக இருக்கும். தேங்காய் எண்ணெயிலேயே அரைத்த விழுதை வதக்கினால் இன்னும் சுவையாக இருக்கும்.