இலங்கை மரவள்ளிக்கிழங்கு கறி
தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு - 400 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பச்சைமிளகாய் - ஒன்று
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
பால் - 4 மேசைகரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைகரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
கிழங்கினை தோல் உரித்து அதன் நடுவில் உள்ள வேரினை எடுத்து சின்ன சின்ன துண்டங்களாக வெட்டி வைக்கவும். வெங்காயம், பச்சைமிளகாய் சின்னதாக அரிந்து வைக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடாகியதும் கடுகு, சோம்பு போட்டு வெடித்ததும் வெங்காயம் போட்டு தாளிக்கவும்.
பின்பு அதில் மரவள்ளிக்கிழங்கு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் என்பவற்றை போட்டு பிரட்டி ஒரளவு தண்ணீர் விட்டு அவிக்கவும்.
கிழங்கு அவிந்ததும் உப்பு, கறிவேப்பிலை போட்டு பிரட்டவும். பின்பு அதனுள் பால் விட்டு கிளறி, 5 நிமிடம் மெல்லிய தீயில் மூடி வைத்து விட்டு அதன் பின்பு இறக்கவும்.
குறிப்புகள்:
மரவள்ளிக்கிழங்கு(ஆள்வள்ளி கிழங்கு) கறி மிகவும் சுலபமாக செய்ய கூடியது. சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். எச்சரிக்கை - தயவு செய்து இஞ்சி சேர்க்க வேண்டாம். இதை செய்து சாப்பிடும் நாட்களில் இஞ்சி சாப்பாடு எதுவும்
சாப்பிட வேண்டாம்.