இலங்கை கோப்பித்தூள்
0
தேவையான பொருட்கள்:
கோப்பிவிதை - 1 கப்
மல்லிவிதை(தனியா) - 1 கப்
சீரகம் - 2 மேசைக்கரண்டி
வேர்க்கொம்பு - 2 துண்டு
சீனி - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
ஒரு வாணலியில் மல்லிவிதை, வேர்க்கொம்பைப் போட்டு வறுக்கவும்.
மல்லிவிதை ஓரளவு வறுபட்டதும் சீரகத்தை சேர்த்து வறுக்கவும்.
சீரகம் வெடிக்கும் போது இறக்கி ஒரு தட்டில் கொட்டவும்.
மீண்டும் வாணலியை வைத்து கோப்பிவிதையைப் போட்டு வறுக்கவும்.
கோப்பி வறுபட்டதும் சீனியைப் போட்டு கலந்து சீனிகரைந்து முறுகியதும் வறுத்த மல்லிவிதையைச் சேர்த்து கலந்து இறக்கவும்.
நன்கு ஆறிய பின்பு கிரைண்டரில் அரைத்து சலிக்கவும்.
முழுவதும் நன்றாக அரைத்து சலித்த பின்பு நன்றாகக் கலக்கவும்.
கலந்தபின்பு மீண்டும் ஒரு முறை கிரைண்டரில் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு முறை கலக்கவும்.
காற்று புகாத டப்பாவில் போட்டு தேவையான போது பாவிக்கவும்.