இலங்கை கோதுமைமாவு இடியப்பம்
தேவையான பொருட்கள்:
இலங்கை கோதுமைமா(மைதாமா) - 500 கிராம்
உப்பு - தேவையான அளவு
நன்றாக கொதித்த நீர் - தேவையான அளவு
செய்முறை:
இலங்கை கோதுமைமா (மைதாமா) அவிக்கவும்(ஒரு மணித்தியாலம்).
அதை அரிக்கவும் (சலித்த)(3 தரம்). உப்பு போடவும்.
பின்பு நன்றாக கொதித்த நீர் விட்டு மர அகப்பையால் (மர கரண்டி) குழைக்கவும்.
குழைத்த எல்லாவற்றையும் ஒன்றாக (பந்துபோல) சேர்க்கவும். சேர்த்த மாவிலிருந்து சிறிதளவு எடுத்து இடியப்ப உரலில் (இடியப்ப அச்சுடன்(சிறிய துளைகள் அதிக முடைய))போட்டு இடியப்ப தட்டில் வட்டமாக பிழியவும்.
பின்பு இடியப்ப தட்டுக்களை( இடியப்பம் அவிக்கும் பாத்திரத்தில் வைத்து (ஸ்டீமர்))ஆவியில் அவிக்கவும்.
இப்போது சுவையானதும் மென்மையானதுமான இடியப்பம் தயாராகிவிட்டது.
அவித்தவற்றை கறியுடன் அல்லது சம்பலுடன் பரிமாறவும்.
குறிப்புகள்:
இடியப்பம் இலகுவில் சமிபாடடையும் ஒரு உணவுப்பொருள். இதில் மா (கார்போஹைட்ரேட்கள்),உப்பு (புளோரைட்),ஆகிய இரண்டு சத்துக்கள் காணப்படும். நோயாளர் எல்லோரும் (சர்க்கரை நோயுள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனையுடன்) உண்ணக்கூடிய உணவு. கவனிக்க வேண்டிய விசயங்கள் (1)நோயாளர் எல்லோரும் (சர்க்கரை நோயுள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனையுடன்) உண்ணக்கூடிய உணவு, (2) அவித்து(1 மணித்தியாளம்), 3 தரம் அரித்த(சலித்த) மைதாமா(இலங்கை கோதுமைமா), நன்றாக கொதித்த நீர் (3)மாவை முதலிலே அவித்து அரித்து வைத்தும் செய்யலாம்.